தமிழ்நாடு

உலகின் சிறந்த நீர்ப்பாசன கட்டமைப்பு பட்டியலில் தமிழக நீர்நிலைகள்

உலகின் சிறந்த நீர்ப்பாசன கட்டமைப்பு பட்டியலில் தமிழக நீர்நிலைகள்

JustinDurai

உலகில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறந்த பழமையான நீர்ப்பாசன கட்டமைப்புகளில் தமிழகத்தின் கல்லணை, வீராணம் ஏரி, காளிங்கராயன் அணைக்கட்டு ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் என்ற அமைப்பு 2021ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை அறிவித்துள்ளது. பழமையான சிறந்த நீர் கட்டமைப்புக்கான விருதுக்காக தமிழகத்திலிருந்து கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகள் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டன. இதில் நிபுணர்கள் குழுவின் நேரடி ஆய்வுக்குப்பின் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம் ஆகியவை தேர்வாகியுள்ளன. இந்தியாவிலிருந்து தேர்வான 4 சிறந்த நீர்ப்பாசன கட்டமைப்புகளில் 3 தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: 'மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்