தமிழ்நாடு

'பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக் கணக்குகள் முடக்கப்படாது' - கருவூலத்துறை ஆணையர்

'பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக் கணக்குகள் முடக்கப்படாது' - கருவூலத்துறை ஆணையர்

JustinDurai

6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை என்று  கருவூலத்துறை ஆணையர் விளக்கமளித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி, 'புதிய தலைமுறை'க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

''ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவலும் உண்மையில்லை; ஓய்வூதியதாரர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். ஆறு மாதக் கால பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் குறித்து கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பரிவர்தனை செய்யாத ஓய்வூதியதாரர்களிடம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆவணத்தை சமர்பிக்க இந்த முறை விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்பதும், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பதும் தவறான புரிதல். இது தொடர்பாக மற்றுமொரு சுற்றறிக்கை இன்று அனுப்பப்படவுள்ளது''.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.