தமிழ்நாடு

ஊர்களின் ஆங்கிலப் பெயர் மாற்ற அரசாணை வாபஸ் : அமைச்சர் பாண்டியராஜன்

ஊர்களின் ஆங்கிலப் பெயர் மாற்ற அரசாணை வாபஸ் : அமைச்சர் பாண்டியராஜன்

webteam

தமிழில் இருக்கும் உச்சரிப்புபோல ஆங்கிலத்திலும் ஊர்ப்பெயர்களை மாற்றும் அரசாணை தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை தமிழில் இருக்கும் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் எழுத தமிழ் வளர்ச்சித்துறை முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 11ஆம் ஹேதி அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 1,018 ஊர்களின் ஆங்கிலப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பில் மாற்றப்பட்டன. எடுத்துக்கட்டாக, தூத்துக்குடி என்பது ஆங்கிலத்தில் 'Tuticorin' என எழுதப்பட்டு வந்தது . இதை தமிழில் உச்சரிப்பது போன்றே ஆங்கிலத்திலும் ‘Thooththukkudi' என மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அரசாணை வாபஸ் பெறப்படுவதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். தமிழில் இருப்பது போன்றே ஆங்கிலத்தில் எழுத வல்லுநர்களைக்கொண்டு மொழிமாற்றம் செய்யப்பட்டு சில பிழைகள் மாற்றப்படும் என்றும், விரைவில் மீண்டும் இது அமலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.