தமிழ்நாடு

முதுமலை வனப்பகுதியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள்

முதுமலை வனப்பகுதியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள்

JustinDurai

முதுமலை அடர் வனப்பகுதிக்குள் வாக்கி டாக்கி தொழில்நுட்பத்தில் செயல்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, குற்ற நடவடிக்கைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதியின் எல்லையில் உள்ள 321 சதுர கிமீ பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை, வனத்துறையினர் ரோந்து நடவடிக்கைகள் மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கண்காணிப்பை இன்னும் எளிமையாக்கும் வகையில் வாக்கி டாக்கி தொழில்நுட்பத்தில் செயல்படும் வகையில் 7 இடங்களில் அதி நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சோலார் சக்தி மூலம் இயங்கும் இவை ஊட்டியில் உள்ள வாக்கி டாக்கி டவர் சிக்னல் மூலம் இணைக்கப்பட்டு அதிலிருந்து பெறப்படும் காட்சிகளை முதுமலையில் உள்ள கண்காணிப்பு மையத்தில் தரும் ஆற்றல் பெற்றவை. இந்த கேமராக்கள் மூலம் வனப்பகுதிக்குள் காட்டு தீ ஏற்படுகிறதா என்பதை வனத்துறை கண்காணித்து வருகிறது. அத்தோடு வனப்பகுதிக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் மற்றும் குற்றச்சம்பவங்கள் ஏதேனும் நடக்கிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: காது வலிக்கு அதிக திறன் கொண்ட மாத்திரையை வழங்கிய வழக்கு: ரூ.1 லட்சம் இழப்பீடு