தமிழ்நாடு

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கட்டுக்குள் வந்த தீ

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கட்டுக்குள் வந்த தீ

JustinDurai

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் கனல் நீடிப்பதால் புகை வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் கடந்த 27ஆம் தேதி மாலை தீப்பற்றியது. 15 ஏக்கரில் தீ பரவிய நிலையில், 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு 2 நாட்களாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஸ்கைலிப்ட் வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும், குப்பை மேட்டிலிருந்து கிளம்பும் புகை காரணமாக இன்னலுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

எனவே, குப்பை கிடங்கில் பணி செய்யும் ஊழியர்கள், சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் 4 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகை மண்டலத்தை நாளைக்குள் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இலங்கை மக்களுக்கு உதவ தயார் நிலையில் தமிழ்நாடு அரசு: அனுமதிகோரி பேரவையில் தீர்மானம்