தமிழ்நாடு

ரகு மரணத்திற்கு லாரி ஓட்டுநரே காரணம்: காவல்துறை அறிவிப்பு

ரகு மரணத்திற்கு லாரி ஓட்டுநரே காரணம்: காவல்துறை அறிவிப்பு

webteam

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அலங்கார வளைவில் மோதி, இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவலை காவல்துறை மறுத்துள்ளது.

அவினாசி சாலையில் ஒருவழிப்பாதையில் தவறுதலாக எதிரே வந்த லாரி மோதியதில், ரகு என்பவர் இறந்ததாக கோவை போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநர் மோகன் கைது செய்யப்பட்டு, கோவை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். டிசம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லாரி ஓட்டுநர் மோகன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக கோவையைச் சேர்ந்த ரகு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அலங்கார வளைவில் மோதி நேற்று முன்தினம் உயிரிழந்ததாக செய்தி வெளியானது. அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டதால்தான், உயிரிழப்பு ஏற்பட்டதாக கோவை மாநகர் முழுவதும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. விபத்து நடைபெற்ற இடத்தில் வட்டமிட்டு, அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரகுவைக் கொன்றது யார்? என்பதை ஆங்கிலத்தில் WHO KILLED RAGHU என்று சாலையில் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த வாசகம் தற்போது அழிக்கப்பட்டுள்ளது.