ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில், பெரும்பாலான மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில், திமுக கூட்டணி 132க்கு அதிகமான இடங்களிலும், அதிமுக கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மொத்தமுள்ள 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் இடங்களில் திமுக 891க்கும் மேற்பட்ட இடங்களிலும், அதிமுக கூட்டணி 177க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாமக 33 இடத்திலும், அமமுக 5 இடத்திலும், தேமுதிக ஓர் இடத்திலும், சுயேச்சை உள்ளிட்ட பிற கட்சிகள் 92 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.