தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

JustinDurai
ஈரோடு மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் புதிய கட்டுபாடுகள் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.
அதன்படி, அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். தேனீர் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் செயல்படவும், திருமணங்களில் 50 நபர்களுக்கும், ஈமச் சடங்குகளில் 20 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்டவை இயங்க ஞாயிற்றுக்கிழமை மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
கர்நாடக-தமிழக சோதனைச் சாவடிகள் மூலம் ஈரோடு வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்புவரை எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழுடன் வருவது கட்டாயமாகிறது.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 24 இடங்களில் பால், மருந்தகம், மளிகைக் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முற்றிலுமாக இயங்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.