தமிழ்நாடு

கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிப்பு

கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிப்பு

webteam

கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழ் பிராமி எழுத்துகள் பதிந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தெரிவித்‌துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்ரீராமன், "3ஆம் கட்ட அகழாராய்வுக்கான பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைவதால், அகழாய்வு ப‌ணிகள் விரைந்து முடிக்கப்பெறும் என்றார். இது வரை கிடைத்த பொருட்கள் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கிமு 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2ஆம் நூற்றாண்டு வரையிலான பிராமி எழுத்துக்கள் அடங்கிய பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கம் அருகே அத்திரம்பாக்கத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை மற்றும் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.