தமிழ்நாடு

“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு

“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு

webteam

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவு ஒரு வேர்க்கடலை வியாபாரியையும் பாதித்துள்ளது. 

திமுக பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், அண்ணா அறிவாலயம் போன்ற திமுகவினர் இருக்கும் பல இடங்களில் வேர்க்கடலை, பட்டாணி ஆகியவற்றை 40 ஆண்டுகளாக விற்று வருபவர்தான் சாரதி. திமுக தலைவர் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கடந்த 28 ஆம் தேதியில் இருந்து சாரதி வியாபாரத்திற்கு போகவில்லை. இன்றைய செயற்குழு கூட்டத்தில்தான் மீண்டும் விற்பனையை தொடங்கினார். 

இது குறித்து அவரிடம் பேசினோம். அவர், “தலைவர் உடல் நலம் சரியில்லாதபோது நான் எப்படி விற்க முடியும். தலைவர் பல முறை என்னிடம் கடலை வாங்கி சாப்பிட்டுள்ளார். எனக்கு வியாபாரம் முக்கியமல்ல” என்றார். மேலும் தலைவர் வீடு திரும்பி வருவார் என நம்பினேன். ஆனால் அவர் வரவில்லை என்கிறார்.

அண்மையில் ஈரோட்டில் நடந்த மாநாடு உட்பட்ட அனைத்து மாநாடுகளிலும் சென்று வேர்க்கடலை, பட்டாணியை இவர் விற்றுள்ளார்.