தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை : ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம்

சிறுமி பாலியல் வன்கொடுமை : ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம்

webteam

பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோ சட்டத்தில் கீழ் ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்து கற்பம் ஆக்கினார். பின்னர் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.  பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட ஒருங்கினைந்த நீதி மன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கார்த்திக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 15 வயது சிறுமியி ஏமாற்றி குற்றவாளி கார்த்திக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் மற்றும் கற்பமாக்கிய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி திலகம் தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து  பாலியல் வன்கொடுமை செய்து ‌கர்ப்பமாக்கிய இளைஞர் கார்த்திக்கை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.