மானாமதுரையில் மோசடி வழக்கொன்றை பதிவுசெய்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராகததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரமணி என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். தனது அந்தப் பணி காலத்தின்போது, முத்தனேந்தல் என்ற இடத்தில் நடந்த மோசடி சம்பவம் குறித்து அவர் வழக்குப்பதிவு செய்தார். தற்போது இந்த வழக்கு மானாமதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரமணி பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதன்படி தற்போது அவர் சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
தொடர்புடைய செய்தி: பெண்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்
மேற்குறிப்பிட்ட மோசடி வழக்கில் ஆஜராகுமாறு மானாமதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து பலமறை இஸ்பெக்டர் ரமணிக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்து இசக்கி, ரமணிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.