தமிழ்நாடு

கற்களால் தாக்கிக் கொண்ட இருவேறு கல்லூரி மாணவர்கள்: ரயில் நிலையத்தில் பரபரப்பு

கற்களால் தாக்கிக் கொண்ட இருவேறு கல்லூரி மாணவர்கள்: ரயில் நிலையத்தில் பரபரப்பு

kaleelrahman

ரயில் நிலையத்தில் இருவேறு கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு எற்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்களும், அரக்கோணம் ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தனர்.

இந்நிலையில், பெரம்பூர் ரயில் நிலையத்தை தாண்டியதும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநில கல்லூரி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொறுமையிழந்த பயணிகள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இதையடுத்து உடனே கீழே இறங்கிய மாநில கல்லூரி மாணவர்கள் ஆத்திரத்தில் அருகே சென்ற அரக்கோணம் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் ரயில் நிறுத்தப்பட்டது.. இதனையடுத்து அந்த ரயிலில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பதிலுக்கு மாநில கல்லூரி மாணவர்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் சிறிது நேரம் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் மற்றும் ரயில்வே போலீசார் கல்வீச்சு தாக்குதல் நடத்திய 15 மாநில கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கல்வீச்சு சம்பவத்தால் சிறிது நேரம் இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்பட்டுச் சென்றது.