தமிழ்நாடு

“பத்து ரூபாய் நாணயத்தை வாங்கலாம்” - நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை

“பத்து ரூபாய் நாணயத்தை வாங்கலாம்” - நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை

webteam

திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் நடத்துநர்கள் பயணிகளிடம் பத்து ரூபாய் நாணயங்கள் பெறக்கூடாது என ஒட்டப்பட்டிருந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டலத்தில் பணிபுரியும் நடத்துநர்கள் யாரும் பயணிகள் தரும் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்குமாறு சுற்றறிக்கை ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. கடந்த 21-ஆம் தேதி ஒட்டப்பட்டிருந்த அந்தச் சுற்றறிக்கை சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவது குறித்த சந்தேகம் ஏற்பட்டது. 

இந்நிலையில் அந்தச் சுற்றறிக்கையை இன்று திருப்பூர் போக்குவரத்து பணிமனை திரும்பப் பெற்றது. இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டல மேலாளர் தனபால் தெரிவித்தபோது, வங்கியில் பணம் செலுத்தும் போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க அவ்வாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டு இருந்ததாகவும், ஆனால் அது பொது மக்களிடம் தவறான கருத்தை பதிவு செய்து அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால், அதனை திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்தார்.