10 நிமிடத்தில் உணவு விநியோகம் செய்வது தொடர்பான அறிவிப்பு குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த 10 நிமிடத்திற்குள் அவர்களுக்கு உணவு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொமேட்டோ நிறுவன தலைமை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்புகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. வாடிக்கையாளர்களுக்கு வேகமாக உணவு வழங்க வேண்டும் என்பதற்காக அப்பணியில் உள்ளவர்கள் அதிவிரைவில் சாலைகளில் பயணிக்க வேண்டியிருக்கும் என்றும் இதனால் போக்குவரத்து விதிமீறல்கள் நேர்வதுடன் சாலை விபத்துகள் அதிகரிக்க கூடும் என்றும் அச்சம் எழுந்தது.
இந்நிலையில் அதிவிரைவு உணவு வினியோக திட்டம் குறித்து சொமேட்டாவிடம் விளக்கம் கேட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: இலங்கையிலிருந்து தமிழ்நாடு வருவோர் மீது வழக்கு பதியக்கூடாது: வி.சி.க-வின் வன்னி அரசு