தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து தொடர்பாக இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலை ரத்துசெய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. 2018ஆம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பதவிக்காலம் 2023 வரை உள்ள நிலையில், அந்தத் தேர்தல் தற்போது ரத்துசெய்யப்படுகிறது. அந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் அதனை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்புடைய செய்தி: கூட்டுறவு சங்க தலைவர் விதியை மீறினால் அதிகாரிகள் வேடிக்கை பார்க்க முடியாது: உயர்நீதிமன்றம்