தமிழ்நாடு

சீர்காழி : அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டி படுகொலை

சீர்காழி : அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டி படுகொலை

webteam

சீர்காழி அருகே காரைமேடு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (65). அதிமுக பிரமுகரும் முன்னாள் காரைமேடு ஊராட்சி மன்ற தலைவரும் ஆன இவர் மாலை வேளையில் வீட்டில் இருந்து சாவடி குட்டை என்ற இடத்தில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். அப்போது ராமகிருஷ்ணன் வயலில் பருத்தி செடிகளுக்கிடையே நெஞ்சில் பலத்த வெட்டு காயத்துடன் மயங்கி கிடந்துள்ளார்.


இதனையடுத்து அவரது உறவினர்கள் ராமகிருஷ்ணனை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராமகிருஷ்ணன் உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.