தமிழ்நாடு

மாஸ்க் அணியாம‌ல் காரில் வ‌ந்த‌ ’அருவி’ ந‌டிகை: அப‌ராத‌ம் விதித்த அதிகாரியுடன் வாக்குவாதம்

மாஸ்க் அணியாம‌ல் காரில் வ‌ந்த‌ ’அருவி’ ந‌டிகை: அப‌ராத‌ம் விதித்த அதிகாரியுடன் வாக்குவாதம்

webteam

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில், கொடைக்கான‌லுக்கு அருவி திரைப்ப‌ட‌ ந‌டிகை அதிதிபால‌ன் காரில் வந்துள்ளார்.

ஏரிப்பால‌த்தில் வ‌ழ‌க்க‌ம்போல‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ளை சோத‌னை செய்த‌ அதிகாரிக‌ள், அவ‌ர் முக‌க்க‌வ‌ச‌ம் அணியாம‌ல் வ‌ந்த‌தைக் கண்டறிந்து அவ‌ருக்கு அப‌ராத‌ம் விதித்தனர். அப்போது அதிதி பாலன், அப‌ராத‌ம் விதிப்ப‌த‌ற்கான‌ அரசாணையை கேட்டும், காருக்குள் இருக்கும்போது முகக்க‌வ‌ச‌ம் க‌ட்டாய‌ம் அணிய‌வேண்டும் என்ற‌ ச‌ர‌த்து உள்ள‌தா என‌வும் அதிகாரிகளிடம் விவாதம் செய்துள்ளார்.

பின்னர், அத‌ற்கான அர‌சாணை எங்க‌ளிட‌ம் இல்லை. அப‌ராத‌த்தை க‌ட்ட‌வேண்டும் என‌ உத்த‌ர‌விட்டு அதிதியிடம் அப‌ராத‌ம் வ‌சூல் செய்துள்ள‌ன‌ர். மேலும், அவரைப் ப‌ட‌ம் எடுத்த‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ளையும் கோப‌த்துடன் பேசியுள்ளார்.

இந்த‌ச் ச‌ம்பவத்தை அடுத்து காருக்குள் அம‌ர்ந்துவ‌ருப‌வ‌ர்க‌ள் முக‌க்க‌வ‌ச‌ம் அணிய‌வேண்டும் என்ப‌து க‌ட்டாய‌மா என‌ உள்ளூர் சுற்றுலா ந‌ல‌ விரும்பிக‌ள் அர‌சுக்கு கேள்வி எழுப்பியுள்ள‌ன‌ர்.