தமிழ்நாடு

”மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

”மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

webteam

தமிழகத்தின் 23-வது முதல்வராக இன்று பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!

காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! pic.twitter.com/bmvRSWcss7

— M.K.Stalin (@mkstalin) May 7, 2021

முன்னதாக, தமிழக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கினார். சென்னை தலைமைச் செயலத்தில் காவல்துறை மரியாதையை ஏற்ற அவர், முதல்வர் இருக்கையில் முதன்முறையாக அமர்ந்து பணிகளைத் தொடங்கினார். முதல்வர் இருக்கையில் அமர்ந்த பின்னர் 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அந்த கோப்புகள் பின்வருமாறு:-

அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.