தமிழ்நாடு

வழக்கை திரும்ப பெறுவதா, வேண்டாமா? - மக்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை

வழக்கை திரும்ப பெறுவதா, வேண்டாமா? - மக்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை

webteam

வழக்கை திரும்ப பெறுவதா, வேண்டாமா என்பது பற்றி தொகுதி மக்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை நடத்துகிறார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் தங்க தமிழ்ச்செல்வனும் ஒருவர். இதனிடையே கடந்த 14ஆம் தேதி அன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்செல்வன், “இந்த வழக்கு எங்களுக்கு எதிராக வந்தால், நான் மேல்முறையீடு செய்யமாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் இந்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஒரு முடிவு கட்டுவேன். எனது தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை” என்று கூறியிருந்தார். 

இதையடுத்து வழக்கில் தீர்ப்பு வந்தபோது இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,  வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மக்களிடம் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை நடத்துகின்றார். நாளை காலை 10 மணியளவில் ஆண்டிப்பட்டியில் இந்த கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.