தமிழ்நாடு

செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கட்டமைப்பு நடைபெற்று வருகிறது - தங்கம் தென்னரசு

செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கட்டமைப்பு நடைபெற்று வருகிறது - தங்கம் தென்னரசு

Sinekadhara

செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனி அமைப்பாக செயல்பட பெரும்பாக்கத்தில் கட்டமைப்பு நடைப்பெற்று வருவதாகவும், விரைவில் முதலமைச்சர் அதனை திறந்து வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனம் கர்நாடக மாநிலத்திற்கு செல்ல உள்ளதாகவும், அதை தமிழகத்திலேயே இருக்கசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய கல்விக் கொள்கை வெளியிட்டபோது, மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் செம்மொழி ஆராய்ச்சி மையம் இயங்கும் என மத்திய அரசு தெரிவித்ததாகவும், அதனை முதலமைச்சர் ஆரம்ப கட்டத்திலேயே எதிர்த்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னையில்தான் இயங்கும் எனத் தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பெரும்பாக்கத்தில் கட்டமைப்பு நடைபெற்று வருவதாகவும், அதனை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கிய பாவேந்தர் நூலகமும் அங்கு செயல்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.