குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி சார்பாக வாழ்த்து தெரிவித்தார் தம்பிதுரை.
அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்த அதே நாளில் தம்பிதுரையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி சார்பாக குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு தம்பிதுரை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் திரௌபதி முர்முவை சந்தித்தார் தம்பிதுரை. குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில் ஜெகதீப் தங்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தம்பிதுரை. குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி சார்பாக வாழ்த்து தெரிவித்ததாக தம்பிதுரை புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சனாதனவாதிகளால் நான் குறிவைக்கப்படுகிறேன்! பாஜகவோடு துளி சமரசம் கிடையாது! - ஸ்டாலின் உறுதி!