தைப்பூச திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில், லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டடம் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்துள்ளனர். இதனால் பழனி முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தைப்பூச திருவிழாவையொட்டி மலையடிவாரத்தில் லட்சகணக்கில் வாழைப்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
பழனி இதுமட்டுமில்லாமல் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளிலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் குவிந்துள்ளனர்.