சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜியத்தின் பரிந்துரையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேசசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணை நடைபெற்றது.
அதில் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டு, பொறுப்பு தலைமை நீதிபதியையும் நியமித்துள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி, மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்டனர். வழக்கை ஏற்க வேண்டாமென பதிவுத்துறைக்கும் உத்தரவிட்டனர்.