தமிழ்நாடு

கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்ஜின் சோதனை வெற்றி - மகேந்திரகிரி இஸ்ரோ மையம் தகவல்

கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்ஜின் சோதனை வெற்றி - மகேந்திரகிரி இஸ்ரோ மையம் தகவல்

webteam

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடிக்கு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எஞ்ஜினின் C-20 E-11 NK III சோதனை நடத்தப்பட்டது.

நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற இந்த சோதனையானது 28 வினாடிகள் நடந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி 30 KN ஹைபிரிட் மோட்டார் 15 வினாடிகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.