தமிழ்நாடு

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: சுமார் 3,500 கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசம்

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: சுமார் 3,500 கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசம்

webteam

ஊத்தங்கரை அருகே கோழி பண்ணையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3,500 கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வேடப்பட்டி கிராமம் இலுப்பமரகொட்டாய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, இரண்டு கோழிப்பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவரது ஒரு பண்ணையில் மின்கசிவு காரணாக திடீரென ஏற்பட்டு தீ விபத்தில் 3750 கோழிக்குஞ்சுகள் முற்றிலும் கருகி உயிரிழந்தன.

இது குறித்து உடனடியாக ஊத்தங்கரை தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கல்லாவி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.