பொதிகை புத்தகத் திருவிழாவில் ஒரு சேர குவிந்த பல ஆயிரம் மாணவர்கள் - கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகிகள் திணறல்.
தென்காசி மாவட்டத்தில் 3-வது பொதிகை புத்தகத் திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், வருகின்ற 24-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவானது 10 நாட்கள் நடைபெறுகிறது.
தென்காசி நகரப் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த புத்தகத் திருவிழாவில், இன்றைய தினம் 7000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒருசேர வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அசாதாரணமான சூழல் நிலவியது.
மேலும், ஒரே நேரத்தில் 7000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புத்தக திருவிழாவிற்கு வருகை தர அனுமதி அளித்தது எப்படி என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், ஒவ்வொரு பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் மாணவர்களை அழைத்து வர வேண்டுமென வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அதிக அளவிலான மாணவர்களை பள்ளி நிர்வாகம் புத்தக திருவிழாவிற்கு அழைத்து வந்துள்ளதால் தான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளை வரிசையில் சீரமைக்கும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.