ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தென்காசி: சங்கர நாராயணர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம்

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலுக்கு தனது மனைவியுடன் வந்த ஆளுநர் ஆர்என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.

PT WEB

செய்தியாளர்: சு சுந்தரமகேஷ்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று மாபெரும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தென்காசி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவியுடன் சங்கரன்கோவிலில் மிகவும் பிரசித்த பெற்ற சங்கர நாராயணன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Governor RN.Ravi

நவராத்திரி விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் சங்கர நாராயணன் மற்றும் கோமதி அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பின் ஆளுநர் கோவிலை சுற்றி பார்வையிட்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம்

பின்பு நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களிடையே போதையை குறித்ததான பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

அப்போது பேசிய அவர், “சென்னையில் பல பெற்றோர்கள் போதை புழக்கம் அதிகரித்துள்ளதாக என்னிடம் புகார் அளிக்கின்றனர். போதையை ஒழிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் வைக்கின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் அதிகளவு கஞ்சா கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக மட்டுமே தகவல்கள் உள்ளன. ஆனால் வேதியியல் தொடர்பான போதைப்பொருட்களின் புழக்கமும் பெருமளவு அதிகரித்துள்ளது. மத்திய அரசு போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகின்றன. மத்திய துறையினர் பல கிலோ கிராம் கெமிக்கல் போதை பொருட்களை பிடிக்கும் நிலையில், மாநில போலீசார் ஒரு கிராம் கூட பிடித்ததாக தெரியவில்லை... அது ஏன்? இங்கு இன்று வந்ததும் நான், ‘போதைப்பொருட்கள் பரவலை நிறுத்த நாம் வலியுறுத்த வேண்டும்’ என முடிவெடுத்தேன். போதை கிடங்குகள் பாகிஸ்தான், தமிழகம் மற்றும் துபாய் போன்ற பகுதிகளில் அதிகம் செயல்படுகிறது.

மாணவர்களாகிய உங்களுக்கு நான் சொல்ல நினைப்பது, கல்லூரி பள்ளிகளில் போதைக்கு எதிராக குழுக்களை ஆரம்பித்து, அதில் நீங்களும் இணையுங்கள். அக்குழுவில் இருப்பதற்கே ஒருவர் பெருமை கொள்ளும் நிலைக்கு அந்த குழுக்கள் வளர வேண்டும். பள்ளிகளிலுள்ள கழிப்பிடத்தில்கூட போதை பொருள்கள் கண்டுபிடிக்கப்ப்படுகின்றன. இதை தடுக்க, மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

நீங்கள் (மாணவர்கள்) உங்களோடுள்ள ஒரு மாணவர் போதைக்கு அடிமையவதை உணர்ந்தால், அவரிடம் பேசுங்கள்... நட்பாக அவர்கள் பெற்றோர்களை நம்பிக்கையுடன் அழைத்து சொல்லுங்கள். அவர்களை நல்வழிப்படுத்துங்கள்” என்றார்.