வாக்குவாதம் pt desk
தமிழ்நாடு

தென்காசி: நகர்மன்ற கூட்டத்திற்கு நாயுடன் வந்த கவுன்சிலர்.. உறுப்பினர்கள் வாக்குவாதம்! நடந்தது என்ன?

தென்காசி நகர்மன்ற கூட்டத்திற்கு சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் நாயை அழைத்து வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

webteam

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பல்வேறு பணிகள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10வது வார்டு சுயேச்சை கவுன்சிலர், ராசப்பா நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாக கூறி, அதை கட்டுப்படுத்த வலியுறுத்தி தெரு நாய் ஒன்றை நகர்மன்ற கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

Street dog

இதனால் ஆத்திமடைந்த பிற கவுன்சிலர்கள் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பேசுகின்ற நேரத்தில் மன்றத்தை அவமதிக்கும் விதமாக அவர் செயல்பட்டதாக கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதை அடுத்து பாஜகவை சேர்ந்த கவுன்சிலர் சங்கர், நாயை வெளியேற்றச் சொல்லி, சுயேட்சை கவுன்சிலர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுக்கு நகர மன்ற தலைவர் சாதிர் கண்டனம் தெரிவித்தார். அடுத்தடுத்த இந்த சம்பவங்கள், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.