cctv camera pt desk
தமிழ்நாடு

சிசிடிவிக்கே விபூதி அடித்த கொள்ளையர்கள்... எப்படியெல்லாம் யோசிக்கறாங்க..!

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிசிடிவி கேமராவில் விபூதியை பூசி; முருகனின் வேல் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற கொள்ளைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Kaleel Rahman

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

Theft

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. தென் திருக்கைலாயம் என அழைக்கப்படும் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்றிரவு மர்ம நபர்கள் புகுந்து முருகனின் கையில் இருந்த மூன்றடி வேல், குத்து விளக்கு உள்ளிட்ட பொருள்கள் மற்றும் இரும்பு பீரோவை உடைத்து அதிலிருந்த பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அடையாளம் காணக் கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராவின் மீது விபூதியை பூசிவிட்டு சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் பதிவுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.