தமிழ்நாடு

தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் : வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் : வானிலை மையம் எச்சரிக்கை

Veeramani

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போதே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.