தமிழ்நாடு

”எங்கள் கோரிக்கையை கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை” - TNTET-ல் தேர்ச்சி பெற்றவர்கள் வேதனை!

”எங்கள் கோரிக்கையை கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை” - TNTET-ல் தேர்ச்சி பெற்றவர்கள் வேதனை!

webteam

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கேட்கக்கூட முதல்வரும், தலைமைச் செயலாளாரும் தயாராக இல்லை என TNTET ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 8 மணிக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டியும். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதி படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.

பணி நியமனத்தின் போது வயதை கருத்தில் கொண்டு பழையபடி வயது தளர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் ஆதரவு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காலி பணியிடங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரப்ப வேண்டும் என கூறினார்.

நிச்சயம் பணி கிடைக்கும் என்று போராடி வருகிறார்கள் இவர்கள் கோரிக்கை நியாயமான கோரிக்கை. ஆசிரியர்கள் கோரிக்கையை விரைவில் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கும் நிலையில், இந்த பிரச்னை முதல்வரிடம் முறையாக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவில்லை எனக் கூறினார்.