தமிழ்நாடு

"ஜன. 4 அன்று பள்ளிகளை திறக்க வேண்டும்" - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

"ஜன. 4 அன்று பள்ளிகளை திறக்க வேண்டும்" - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

webteam

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கும் தேதியை ஒருநாள் தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர். நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளதால், பள்ளிகள் திறக்கும் தேதியை ஒருநாள் தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதாவது ஜனவரி 3 ஆம் தேதிக்கு பதில், 4ஆம் தேதி பள்ளிகளை திறக்க ஆவண செய்யுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை புதிய தலைமுறை தொடர்புகொண்டபோது, தங்களுக்கு இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் அவ்வாறு வந்தால் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.