தமிழ்நாடு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட் - அரசு கடும் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட் - அரசு கடும் எச்சரிக்கை

webteam

ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் இல்லாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் வரும் 22ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களும், காலமுறை ஊதியம் பெறுபவர்களும் அன்று பணிக்கு வராவிட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.