தமிழ்நாடு

ஆசிரியர் லக்குமணசாமிக்கு "தமிழ்ச் செம்மல்" விருது

ஆசிரியர் லக்குமணசாமிக்கு "தமிழ்ச் செம்மல்" விருது

webteam

பாரம்பரியம் மிக்க தமிழ் மொழியை அடுத்து வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஆவணப்படுத்தும் ஆசிரியர் லக்குமணசாமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

மதுரை திருநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் லக்குமணசாமி. 74 வயதாகும் இவருக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது அறிவிக்கப்பட்டது. ஆசிரியர் லக்குமணசாமிக்கு 2018ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளார். 

ஆசிரியர் லக்குமணசாமி 1960 ஆம் ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம், ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பாடு, இளைஞர் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்துள்ளார். மேலும் 1000 கவிதைகள், 800 சிறுகதைகள், 800 கட்டுரைகள்,50 அறிவியல் கட்டுரைகள், 20 விவசாய கட்டுரைகளையும் படைத்துள்ளார். தொடர்ந்து தனது எழுத்து பணியினை தமிழ் மொழி வளர்ச்சிக்காக செலவிட்டு வரும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் "தமிழ்ச் செம்மல்" விருது குறித்து பேசிய அவர், பல்வேறு காலகட்டங்களில் பாரதியார் விருது, சிந்தனை செம்மல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றாலும், தனது 50 ஆண்டுகால உழைப்பிற்கு பலனாக தமிழக அரசு வழங்கியுள்ள தமிழ்ச் செம்மல் விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெறுமையும் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் அதோடு தனது பணியை நிறுத்திவிடாமல் பாரம்பரியமான தமிழ் மொழிகள் குறித்து அடுத்து வரும் தலைமுறையினர் அறிந்து கொண்டும், தமிழை முதன்மை மொழியாக கடைபிடிப்பதை வலியுறுத்தும் விதமாக கல்வெட்டு, ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் குறித்து ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.