தமிழ்நாடு

புதிய விதிமுறைகளுடன் இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்!!

புதிய விதிமுறைகளுடன் இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்!!

webteam

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக் வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது. அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்தது. இது தொடர்பான வழக்கை 8 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகவே மீண்டு கடைகளைத் திறப்பதற்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்பதால் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன.

இதில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. உச்சநீதிமன்ற விதிகளை உரியவகையில் நடைமுறைப்படுத்த டிஜிபி உத்தரவின் பேரில் இன்று டாஸ்மாக் விற்பனை செயல்பட இருக்கிறது. இந்த விதிமுறைகளைப் பின்பற்ற அனைத்து மாவட்ட எஸ்.பி மற்றும் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அதில் 550 பேர் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் கொடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தனிமனித இடைவெளியைப் பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம். மேலும் டோக்கன் தரும் இடம் தனியாக அமைக்கவேண்டும், மது விநியோக கவுண்ட்டர்களை அதிகரிக்கச் செய்யவேண்டும், பார்க்கிங் இடம் அமைக்க வேண்டும் என உத்தரவுகள் காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.