மின்சார வாரியம்  முகநூல்
தமிழ்நாடு

அடிக்கடி மின்தடை ஏன்? மின்சார வாரியம் விளக்கம்

“கோடை வெயிலின் தாக்கத்தால் மின் மாற்றிகள், கம்பிகளில் பழுது ஏற்படுகிறது. அதனாலேயே மின் தடை ஏற்படுகிறது” என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

PT WEB

சென்னையில் ஆவடி, அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை என புகார் எழுந்தது.

இந்நிலையில், “கோடை வெயிலின் தாக்கத்தால் மின் மாற்றிகள், கம்பிகளில் பழுது ஏற்படுவதாலேயே மின்தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்படும் சில இடங்களில் உடனே சரிசெய்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், ‘வரும் நாட்களில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படும் இடங்களில் ஆய்வு செய்ய மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.