சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
- தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், ஒலி எழுப்பும் ஹாரண்களை பயன்படுத்தினால் 1000 ரூபாய் அபராதம்
- இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 2000 ரூபாய் அபராதம்
- வாகனங்களை ஓட்டுவதற்கு மனரீதியான தகுதி இல்லாமல் இருந்தால் 2000 ரூபாய் அபராதம்
- வாகனங்களை பதிவு செய்யாமல் இயக்கினால் ஏற்கனவே இருந்து அபராதம் 2500 ல் இருந்து ஐந்தாயிரம் ஆக உயர்வு
- அபாயகரமான விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், வாகனத்தை ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம்
- வாகன பந்தையங்களில் ஈடுபட்டால் 10 ஆயிரம் அபராதம்
- ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் அபராதம்