ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
ஜிஎஸ்டி வரி முறையில் பல விதிமுறைகள் குழப்பமாக உள்ளதாகவும், அதனை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்காமல், மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் புதிதாக கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.