தமிழ்நாடு

வன்னியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உயர்கல்வித்துறை மேல்முறையீடு

வன்னியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உயர்கல்வித்துறை மேல்முறையீடு

கலிலுல்லா

வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் கல்வித்துறை சார்பில் தனியே மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சட்ட விதிமுறைகளை மீறி சென்னை உயர்நீதிமன்றம் உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர B.C., M.B.C., ஆணையங்கள் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் ஆகியோர் சார்பிலும் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.