தமிழ்நாடு

இ-சேவை மையங்களில் 15 வகை சான்றிதழ்கள்!

இ-சேவை மையங்களில் 15 வகை சான்றிதழ்கள்!

webteam

அரசு இ- சேவை மையங்களில், புதிதாக, 15 வகையான சான்றிதழ்கள் வழங்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு இ - சேவை மையங்களில், வருவாய் மற்றும் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவை இணையதள சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன. இதேபோல் மேலும், 15 சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகள் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் ஆகிய 15 வகையான சான்றிதழ்கள், மின்னாளுமை திட்டத்தில், இ - சேவை மையங்கள் வழியாக வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.