தமிழ்நாடு

நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33% வரை குறைப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33% வரை குறைப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

webteam

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதால் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பை 33 சதவீதம் வரை குறைக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழினிச்சாமி தலைமையில் 5 ஆவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டதில், பத்திரப்பதிவுக்கான நிலங்களில் வழிகாட்டு மதிப்பை 33 சதவீதம் வரை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிலங்களுக்கான வழிகாட்டுதல் மதிப்பு அதிகரிக்கப்பட்டதால், பத்திரப்பதிவு குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. பதிவுத்துறைக்கு வருவாயை அதிகரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பத்திரப் பதிவுத்துறை முன்னாள் தலைவர் ஆறுமுக நயினார் கூறும்போது, 2012 ஆம் ஆண்டு நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு அதிகரிக்கப்பட்டதால், பதிவுத்துறையின் வருடாந்திர வருமானத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக பொதுமக்களில் பெரும்பாலானோர் நிலங்களை பதிவு செய்யாமலேயே இருந்தனர். இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிசெய்யவே இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவு அமலுக்கு வந்தால், நிலங்களை பதிவு செய்யாமல் உள்ள மக்கள் அவற்றை பதிவு செய்ய முன்வருவர். இதனால் அரசுக்கு வருவாய் கூடும். இது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்று அவர் கூறினார்.