தமிழ்நாடு

வீடுகளை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை...! - தமிழக அரசு எச்சரிக்கை

வீடுகளை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை...! - தமிழக அரசு எச்சரிக்கை

webteam

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம், அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் காலி செய்ய வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

இது போன்ற செயல்கள் பொது சேவையில் ஈடுபடுவோரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையிலானது எனவும், அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை‌ எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் புகார்கள் வரும் பட்சத்தில் உடன‌‌டி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.