தமிழ்நாடு

`சசிகலா முதல் விஜயபாஸ்கர் வரை..’ - அரசு விசாரணைக்கு உத்தரவிட ஆணையம் பரிந்துரை!

`சசிகலா முதல் விஜயபாஸ்கர் வரை..’ - அரசு விசாரணைக்கு உத்தரவிட ஆணையம் பரிந்துரை!

நிவேதா ஜெகராஜா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ராம் மோகன் ராவ், சசிகலா மருத்துவர் சிவக்குமார், முன்னாள் மருத்துவத்த துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் ராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும். உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து..

இவற்றுடன் “ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில இணைய விளையாட்டு தடைச் சட்டங்கள் குறித்த நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையிலும், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டும், இதுபோன்ற விளையாட்டுக்களை தடைசெய்வது குறித்த சட்ட வரைவினை வகுத்தல் குறித்தும், அதில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விளையாட்டுக்களை கொண்டுவரப்பட தெரிவிக்கப்பட்டது. தடை விபரமும் செய்வதற்காக அவசர சட்டம் வகை உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.