தமிழ்நாடு

7.5 % உள் ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதலின்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

7.5 % உள் ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதலின்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

webteam

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதைத்தொடர்ந்து உள் ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க 3 அல்லது 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

45 நாட்கள் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றமும் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நம்புவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது