தமிழ்நாடு

யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு 

யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு 

webteam

எஸ்.ஐக்கு நிகரான போக்குவரத்து அதிகாரிகளே வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல எனவும் போக்குவரத்து விதிமீறல் என்பதே இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பதற்காகவே அபராதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்திருந்தார். 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதில், எஸ்.ஐக்கு நிகரான போக்குவரத்து காவல் அதிகாரிகளே வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஐக்கு குறைவான போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.