தமிழ்நாடு

நவம்பர் மாதம் முதல் 1- 8ம் வகுப்புகள் தொடங்கும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நவம்பர் மாதம் முதல் 1- 8ம் வகுப்புகள் தொடங்கும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கலிலுல்லா

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1- 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மற்றொருபுறம் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும், வெள்ளி, சனி, ஞாயிறன்று வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக் கோருவது பற்றியும் முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோரின் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாடுதலங்களில் தரிசனம் செய்வதற்கான தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.