தமிழ்நாடு

67 ஆயுள் கைதிகள் முன் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு

67 ஆயுள் கைதிகள் முன் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு

webteam

எம்ஜிஆர் நூற்றாண்டு பி‌றந்தநாளையொட்டி 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சிறைகளில் இருக்கும் 67 ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு  அறிவித்துள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன் 1‌0 ஆண்டுகள்‌ தண்டனைக் காலம் நிறைவு செய்த ‌67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

மேலும் மாநில ஆளுநருக்கான அதிகாரம், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி முதற்கட்டமாக 67 ஆயுள் கைதிகள் முன் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.