தமிழ்நாடு

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்

jagadeesh

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊதி‌ய உயர்வு, பதவி உயர்வு, மருத்துவர் பணியிடங்களை குறைக்கக் கூடாது, உயர் சிறப்பு மருத்துவ படி‌ப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 25-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனால், பல்வேறு மாவட்டங்களில் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும், சுழற்சி முறையில் 5 மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2 மருத்துவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு‌ சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, குறைந்த அளவு மருத்துவர்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.