தமிழ்நாடு

பல மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

Veeramani

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழையோ அல்லது கனமழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, புரெவி புயலைப்போலவே தென் தமிழக மாவட்டங்களில் வரும் 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் சில பகுதிகளில் விட்டுவிட்டு மழை பொழியும் என்றும் கணித்துள்ளனர்.

இந்திய வானிலை மையத்தின் தகவல்களின்படி, டிசம் 19 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழியும் என்றும், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்தனர். நேற்று மாலை முதலே தென் தமிழகம் மற்றும் சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.